Friday, May 5, 2017

மலரட்டும் மண்ணுக்கேற்ற 

மார்க்ஸியம்!

*** தமிழ் ஹிந்து தலையங்கம்***


உற்பத்தியில் மூலதனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் உழைப்புக்கும் உண்டு. ஆனால், உபரியாகக் கிடைக்கிற லாபம் மூலதனத்தையே சேர்கிறது. உழைப்புக்குக் கிடைக்கும் பயன் கூலியாக மட்டுமே இருக்கிறது. அந்தக் கூலியும் அத்தியாவசியத் தேவையையும் பூர்த்திசெய்துகொள்ளப் போதுமானதாய் இருப்பதில்லை.

நிலவுடைமைச் சமுதாயம், ஆலை உற்பத்திக்கு மாறிய கால கட்டத்தில் தொழிலாளர்களின் ஒருங்கிணைவுக்கு ஒரு சாத்தியம் உருவானது. அந்த ஒருங்கிணைவு மூலதனத்துக்கும் உழைப்புக்கும் ஒருசேர மதிப்பளிக்கும், இரண்டையும் ஒன்றாக்கும் ஒரு சோஷலிச கனவுக்கு வித்திட்டது. அது வெறும் கனவு மட்டுமல்ல. மானுட வரலாற்றின் கால மாற்றங்களில் கட்டாயம் நடக்க வேண்டிய மாற்றம் என்பதை தனது மூலதனம் நூலில் அறிவியல்பூர்வமாக நிரூபணம் செய்தார் காரல் மார்க்ஸ். உற்பத்தி முறையின் மாற்றங்களுக்கு ஏற்ப, சமூகத்தின் சகல துறைகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் அவர் வரலாற்றுரீதியில் நிரூபித்தார்.

மார்க்ஸ் ஐரோப்பிய ஆலை உற்பத்தி முறையில் எதிர்பார்த்த சோஷலிச கனவு, ரஷ்யாவின் நிலவுடைமைச் சமுதாயத்தில் நிறைவேறி இடைநின்றுவிட்டது. அதேவேளையில் கியூபா, வெனிசுலா என்று உலகத்தின் பல நாடுகளும் சோஷலிச கனவை இயன்றவரைக்கும் நனவாக்கியுள்ளன. இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் கையில் மத்திய அரசு வரவில்லையென்றாலும், மார்க்ஸின் தாக்கம் நேருவிய காலகட்டத்திலேயே தொடங்கிவிட்டது. விளைவாக, இந்திராவின் ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்பின் விழுமியங்களில் ஒன்றாக அதன் முகப்புரையில் இடம்பெற்றது. ஆக, உலகில் மார்க்ஸ் தாக்கம் ஏற்படுத்தாத சமூகம் என்று ஒன்று இன்றில்லை எனலாம்.

முதலாளித்துவமானது சோஷலிசத் திட்டங்களுக்கு எதிராக தன்னைத் தக்கவைத்துக்கொள்வதில் முன்னெப்போதைக் காட்டிலும் மிகப்பெரிய வியூகங்களை வகுத்துக்கொண்டுள்ளது. காரல் மார்க்ஸின் அறைகூவலை தொழிலாளர் சமூகம் காதுகொடுத்துக் கேட்கும் முன்பே உலக முதலாளிகள் ஒன்றுகூடிவிட்டார்கள். இன்றைய நவீனப் பொருளாதார யுகத்தில், பண்டங்கள் என்பது உற்பத்திப் பொருட்கள் மட்டுமல்ல, சேவைப் பணிகள், கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை, தொழில்நுட்பம் என்று அதன் எல்லைகள் விரிவடைந்துகொண்டே போகின்றன. மூலதனம் இன்று தனிநபர் முதலீடு என்ற நிலையையெல்லாம் தாண்டி, பன்னாட்டு எல்லைகளில் விரவி நிற்கிறது. பங்கு முதலீடு என்ற கண்ணுக்குத் தெரியாத மாயக்கரங்களால் இன்றைக்கு உற்பத்தி ஆட்டிவைக்கப்படுகிறது. இந்தப் புதிய சூழலையும் மனதில் கொண்டுதான் இனி சோஷலிசத் திட்டங்கள் வகுக்கப்பட்ட வேண்டும்.

காரல் மார்க்ஸ் மூலதனத்தை எழுதிய நாட்களில் உலக வர்த்தக நிறுவனம் போன்ற முதலீடுகளைப் பாதுகாக்கும் அமைப்புகள் எதுவும் இல்லை. ஆனால் இப்போது உலக வர்த்தக நிறுவனம், பன்னாட்டு உடன்படிக்கைகளின் வழியாக, உலக நாடுகள் இயற்றும் சட்டங்களுக்கெல்லாம் முன்வரைவைத் தயாரித்து அளித்துக்கொண்டிருக்கிறது. விவசாயம் தொழில்துறையின் வசமாகிறது. விதைகளும் காப்புரிமையின்கீழ் பண்டங்களாக்கப்பட்டுவிட்டன. உற்பத்தியில் உழைப்பின் பங்கைக் காட்டிலும் முதலீடே முதன்மை வகிக்கிறது. இந்தப் புதிய பொருளாதாரச் சூழலில் காரல் மார்க்ஸ் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார். இந்தியாவில் இந்த மண்ணுக்கு ஏற்றதாக மார்க்ஸியம் மலரும் நாளில், இந்தியாவின் முழுமையான சோஷலிச கனவும் நிறைவேறும்.
மாவட்ட தலைவர் தோழர் சுந்தரம் பனி நிறைவு பாராட்டு விழா பதிவுகள்!மேலும் பதிவுகளை காண இங்கே சொடுக்கவும்...

Thursday, April 27, 2017

Friday, March 31, 2017

IDA குறைவு ! 

01.04.2017 முதல் நமது IDA 2.3 சதம் குறைந்து மொத்தம் 117.2 சதமாக மாறியுள்ளது.


விலைவாசி குறைந்த பாடில்லை. ஆனால் IDA மட்டும் குறைகிறது. அதெப்படிங்க? என கேட்கிறார்கள்! நமக்கும் தான் புரியவில்லை !! 


எல்லாம் தொழிலாளிக்கு எதிரான, வெளிப்படை தன்மை இல்லாத தில்லாலங்கடி கணக்கு முறைகள் தான்!

Friday, March 17, 2017

வீட்டு வாடகை ரசீது கேள்வியும் பதிலும்!!

கேள்வி : வருமான வரி விலக்கிற்காக பலர் வாடகை ரசீது கொடுத்துள்ளனர். 
    இப்போது வீட்டு உரிமையாளரின் PAN Number உடன் உரிய படிவத்தில் கொடுக்க வேண்டும் என AO Drawal தெரிவிக்கிறார். ?இல்லை எனறால் கூடுதல் வரி பிடித்தம் இருக்கும் என்கிறார் .
    PAN No. கொடுப்பது எப்படி சாத்தியம் ? எத்தனை வீட்டு உரிமையாளர்கள் PAN No. வைத்திருக்கிறார்கள் ?

பதில்: மாத வீட்டு வாடகை 8333 க்குள் அல்லது வருட மொத்த வாடகை 1,00,000 க்குள் இருந்தால் வீட்டு உரிமையாளரின் PAN No. கொடுக்கவேண்டியதில்லை. 
     1,00,000 க்கு மேல் இருந்து வீட்டு உரிமையாளரிடம்  PAN No. இல்லை என்றால் ஊழியர் ஒரு declaration கடிதம் கொடுக்க வேண்டும். ஆனால் அனைவரும் printed ரசீது கொடுக்க வேண்டும் .

Thursday, March 16, 2017

அஞ்சல் அட்டை... அனுப்பும் இயக்கம்!

கோழிக்கோடு தேசிய செயற்குழு முடிவின் படி ...

நிதி ஆயோக் பரிந்துரையின் அடிப்படையில், BSNL மற்றும் ITI நிறுவனங்களை விற்கத் துடிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும், 
தனி, துணை டவர் கம்பெனி உருவாக்கத்தை எதிர்த்தும்

பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் 16-03-2017 தொடங்கி 15-04-2017 வரை நடத்தப்பட வேண்டும்.

கிளை செயலர்கள் அனைத்து உறுப்பினர்களையும் அணுகி கீழே குறிப்பிட்டவாறு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பும் வேலையை செய்து முடித்திட வேண்டும்.சிறப்பாக நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


BSNL ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பு சார்பில் திருச்சி BSNL பொது மேலாளர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. BSNLEU சங்கமும் இணைந்து ஆர்பாட்டத்தில் பங்கேற்றது.NFTE மாவட்ட தலைவர் தோழர். P சுந்தரம், BSNLEU மாவட்ட தலைவர் தேவராஜன் ஆகியோர் தலைமையில்,

 •  மூன்றாவது ஊதியக்குழு பேச்சுவார்த்தையை துவக்கு…
 •  ஊதியக்குழு சம்பந்தமான DPE வழிகாட்டுதலை வெளியிடு… 
 •  BSNL நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்க்காதே…
 •  தனி செல்கோபுர நிறுவனம் ஆரம்பிக்காதே…


ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தியும்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் 
                                    ஆர்ப்பாட்டம்.சிறப்பாக நடைபெற்றது.

NFTE மாவட்ட செயலர் S பழனியப்பன், துணை செயலர் பாலகுரு,  TEPU மாநில தலைவர். இளங்கோவன், மாவட்ட செயலர் ரவீந்திரன், BSNLEU மாவட்ட செயலர் அஸலம் பாஷா, துணை செயலர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநில துணைத்தலைவர் தோழர். ஆறுமுகம், சிறப்பு அழைப்பாளர் தோழர் ஆசைத்தம்பி உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட தோழர்கள்  முழுதும் இருந்து கலந்துகொண்டனர்.


ஆர்ப்பாட்ட பதிவுகளை காண கீழே  சொடுக்கவும். ↓↓↓
video

Wednesday, March 15, 2017

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 மத்திய சங்க அறைகூவலின்படி நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

நாள்: 16-03-2017, பிற்பகல் 01:15 மணி.
இடம்: PGM அலுவலகம், திருச்சி.
கோரிக்கைகள்:

v மூன்றாவது ஊதியக்குழு பேச்சுவார்த்தையை துவக்கு
v ஊதியக்குழு சம்பந்தமான DPE வழிகாட்டுதலை வெளியிடு 
v BSNL நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்க்காதே
v தனி செல்கோபுர நிறுவனம் ஆரம்பிக்காதே

திரளாக கலந்துகொள்வீர்!

Saturday, March 11, 2017

நெடுவாசல் போராட்ட ஆதரவு ஆர்ப்பாட்டம்! • விவசாயத்தையும் விவசாயிகளையும் அழித்தொழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலும் கைவிட வலியுறுத்தி நெடுவாசல் கிராம மக்கள் நடத்தும் போராட்டத்தை ஆதரித்து.
 • சேலம் மாநில சங்க செயற்குழு முடிவின்படி,

     06-03-2017 அன்று மாலை முசிறி தொலைபேசியகம் முன்பு நமது மாவட்ட சங்கம் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.
     மாவட்ட துணை செயலர் தோழர். பாலகுரு மற்றும் ஞானவேல் அவர்களின் முழக்கங்களுடன், மாவட்ட செயலர் S பழனியப்பன், மாநிலசெயலர் K நடராஜன் ஆகியோர் நெடுவாசல் போராட்டத்தை ஆதரித்து பேசினார். 
      ஒலிபெருக்கி இல்லாமலேயே மாநில செயலர் கணீர் குரலில் ஆற்றிய உரை மக்களை வெகுவாக ஈர்த்தது.


சிறப்பான மாவட்ட செயற்குழு!


      நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் 06-03-2017 அன்று முசிறியில் சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் ஜவஹர், திருப்பதி, அவர்களின் தலைமையில் மாவட்ட துணை செயலர் தோழர் மில்டன் அவர்களின் வழிகாட்டலில் முசிறி தோழர்கள் நல்ல முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 
      22 கிளை செயலர்கள், 13 மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் , 5 சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற முழுமையான செயற்குழுவாக அமைந்தது. 
      மாவட்ட தலைவர் தோழர் சுந்தரம் தலைமையில், தோழர் ஜவஹர் வரவேற்புரையாற்ற தோழர் பாலகுரு அஞ்சலியுரையுடன் செயற்குழு தொடங்கியது. மாவட்ட செயலர் தோழர். S பழனியப்பன் அவர்களின் அறிமுக உரைக்கு பிறகு 20 கிளை செயலர்கள், 10 மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் பொருளாய்வு விவாதத்தில் கலந்துகொண்டனர்.

 • கிளை மாநாடுகள்,
 • ஒற்றை இலக்க உறுப்பினர் கிளைகள் இணைப்பு,
 • உறுப்பினர் மாற்றல் பிரச்சனைகள்,
 • பாட்டரி, பவர் பிளான்ட் பிரச்சனைகள்,
 • கேபிள் பழுதுகள்,
 • மொபைல் கவரேஜ்,
 • TOPUP கார்டு அளித்தலில் உள்ள குறைபாடு,
 • விஜய் ப்ராஜெக்ட் இன்சென்டிவ்,
 • NPC இன்சென்டிவ்,
 • உபகரணங்கள் வழங்கல் குறைபாடு,
 • கேபிள் கான்ட்ராக்ட் பிரச்சனை,
 • ஒப்பந்த ஊழியர்  பணி நேர உயர்வு மற்றும் கூலி உயர்வு,,
 • ஆளில்லா தொலைபேசியக செயல்பாடு,
 • மாவட்ட சங்க செயல்பாடு  
 • எதிர்நோக்கும் ஊதிய மாற்றம்,
 • எதிர்வரும் போராட்டங்கள் 
உள்ளிட்ட அனைத்தும் விவாதிக்கப்பட்டது.
      முசிறி துணைக்கோட்ட அதிகாரி திரு. கிருஷ்ணா சாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

     மாநில செயலர் தோழர். நடராஜன் அவர்கள் நடந்து முடிந்த அகில இந்திய செயற்குழு மற்றும் மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி சிறப்புரையாற்றினார். 09-03-2017 அனைத்து சங்க பேரணி, 16-03-2016 கோரிக்கை ஆர்ப்பாட்டம், தபால் அட்டை இயக்கம், ஊதிய மாற்ற பிரச்சனையில் மத்திய சங்க செயல்பாடுகள், மாநில மட்ட பிரச்னை தீர்வுகள் ஆகியவை பற்றி விளக்கி சிறந்ததொரு உரையை வழங்கினார்.
      தோழர் மனோகரன் அவர்களின் நன்றியுரையோடு செயற்குழு சிறப்பாக நிறைவுபெற்றது.