Tuesday, October 25, 2016

தோழர்.சிவசுந்தரம் ! 
ஓய்வு காலம் சிறக்க வாழ்த்துகிறோம்.
     திருச்சி நகரில் அனைவரின் நன்மதிப்பை  பெற்ற தோழர்! சிறந்த தொழிற்சங்கவாதி! 1982-ல் வேதாரண்யத்தில் தனது பணியினை தொடங்கி  31.10.2016 அன்று தனது நிறுவன பணியினை முடிக்கின்றார். 
     தனது பனிக்காலத்தில் சிறந்த பணியாளர் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். சிறந்த லைன் மேன் என வேதாரண்யத்தில் முத்திரை பதித்த அவர் திருச்சி நகரில் உதான் பிரிவில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றியபோது அவரது பணி மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக BHEL, திருச்சி நிறுவனதிற்கான BSNL தூதர் என்ற அளவிற்கு சிறப்பாக பணியாற்றினார். அந்நிறுவன பணியாளர்களின் அனைத்து தொலை தொடர்பு தேவைகளையும். நிறைவேற்றும்  ஒரு விற்பனை பிரதிநியாக இருந்தார்.
     BHEL-Prepaid CUG என்ற சிறப்பு CUG திட்டத்தை உருவாக்கி அதில் 2971 வாடிக்கையாளரை இணைத்து, மேலும் அதில் 1342  வாடிக்கையாளர்களை MNP மூலம் இணைத்துள்ளார். இவைகளால் மட்டும் ரூ. 10,69,560/= வருவாய் ஆண்டுக்கு BSNL நிறுவனத்திற்கு கிடைத்துவருகிறது. 
    அவரது ஓய்விற்கு பிறகும் இப்பணிகளை ஒருவர் விருப்பத்துடன் ஏற்று தொடர வேண்டும் என்பது அவரது விருப்பம். 
     NFTE பேரியக்கத்தின் சிறந்த தோழனாக, தலைவனாக சிறப்பாக செயல்பட்டு முத்திரை பதித்துள்ளார். 
     வேதாரண்யத்தில் கிளை செயலராக தொழிற்சங்க பணியை தொடங்கியவர். மாநில சங்க பொறுப்பாளராகவும் செயல்பட்டு சிறப்பித்துள்ளார். 
      தனது பணிகாலத்தில் 1984-ல் சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் இருந்து 2016 வேலூர் மாநாடு வரை அனைத்திலும் தவறாமல் பங்கேற்றவர்.  1986-ல் கொல்கத்தா சால்ட் லேக் -ல் நடந்த அகில இந்திய மாநாடு முதல் 2015 ஜபல்பூர் அகில இந்திய மாநாடுவரை அனைத்திலும் தவறாமல் பங்கேற்றவர்.
       1982 தொடங்கி பணி காலம் முழுதும் நடைபெற்ற அனைத்து வேலை நிறுத்தங்களிழும் உறுதியுடன் கலந்துகொண்டவர். கடந்த செப்டம்பர் 2-ல் நடைபெற்ற வேலை நிறுத்த பங்கேற்பின் போது பல அதிகாரிகள் அவரது பணி ஓய்வை காரணம் காட்டி பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்திய போதும் மறுத்து உறுதியாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்றார்.
      ஒரு சிறந்த தோழனாக பரிணமித்த தோழர். சிவசுந்தரத்தின் பணிகளை பாராட்டுவதோடு அவர் விட்டு சென்ற பணிகளை தொடர உறுதியளிக்கின்றோம். அவரது பணி ஓய்வு காலம் சிறக்க திருச்சி மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.

No comments: